Thursday, June 25, 2009

சின்னபுள்ள தனம்......

நான் ஆறு முதல் பத்து வரை படித்தது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பள்ளியில்... ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளி மாவட்டத்தில் முதல் மதிபெண் வாங்கும்... வெறும் பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி அது... எங்கள் பள்ளியின் தாளாளர் இந்து, அதனால் வாரந்தோறும் வெள்ளி அன்று பஜனை உண்டு.. பள்ளி முடிஞ்சு அறை மணி நேரம், சரியா சாயுங்காலம் ஐந்து மணி ஆகிவிடும்... நான் தினமும் பள்ளிக்கு பஸ்ஸில் தான் வருவேன்... பள்ளிக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் ஒரு கிலோமீட்டர் இருக்கும்... நானும் என் தோழியும் தான் நடந்து செல்வோம்... அன்றொருநாள் பஜனை ரெண்டுபேரும் போகும்போது வழியில் ஒரு இருபது பைசா கிடந்தது... நான் உடனே குனிந்து அதை எடுத்து லஞ்ச் பாகில் போட்டேன்... அங்கு நின்று கொண்டிருந்த அண்ணன்கள், " என்ன பாப்பா பத்து காசா " என்றார்கள்... நான் உடனே " இல்ல நா இருபது காசுனு சொன்னேன்"... ஆனா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப அசிங்கமாயிடுச்சு(ச்ச் ச்ச் வெளிய சொல்லாதீங்க)... என் பிரெண்டு " ச்சே கீழ போட்டுடு டி, அசிங்கமயிடுசுனு சொன்னா"... ஆனா நான் " விடுடி வாழ்கையில இதலாம் சகஜம், இன்னைக்கு வெள்ளி கிழமை வேற கிடைச்ச லக்ஷ்மிய கீழ போடகூடாதுனு" சொன்னேன்... ஆனா அத இப்போ நினைகிரப்ப சின்ன புள்ள தனமா இருக்கு....

No comments:

Post a Comment